/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1396.jpg)
வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில்நடைபெற்று வருகிறது.
இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக குடும்பத்துடன் லண்டன் சென்ற அஜித் அண்மையில் சென்னை திரும்பினார். அதன் பிறகு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து நடிகர் அஜித் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏகே 61 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் அதீரா கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பைவெளிப்படுத்தி இருப்பார். இதனைத்தொடர்ந்து ஏகே 61 படத்திலும்நடிகர் சஞ்சய் தத் அதே போன்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளாராம். விரைவில் சஞ்சய் தத் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)